முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் 76-வது பிறந்தநாளை நாடு முழுவதும் காங்கிரசார் கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஹரி ஹரசுதன் தலைமையில், பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக, கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. 76 தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச சீருடை மற்றும் உணவு வழங்கப்பட்டது.
சிறப்பு அழைப்பாளர்களாக முன் னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில துணை த்தலைவர் எம்.என். கந்தசாமி, கோவை செல்வன், சரவணகுமார், முன்னாள் மேயர்வெங்கடாசலம், மகேஷ்குமார், ஷோபனாசெல்வன், காயத்ரி, கணபதி சிவகுமார், சௌந்த ரகுமார், மதியழகன், டென்னிஸ் செல் வராஜ், ஜெர்ரிலூயிஸ், ராகவன், அரிமா ஆறுமுகம், பார்த்திபன், வெள்ளைச்சாமி, காமராஜ் துல்லா, இமயம் ரகமத்துல்லா, சண்முகம், ஜமா லுதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



