fbpx
Homeபிற செய்திகள்‘சணல் உற்பத்திக்கு அடுத்த 5 ஆண்டுக்கு ரூ.485 கோடி திட்டங்கள் செயல்படுத்த முடிவு’

‘சணல் உற்பத்திக்கு அடுத்த 5 ஆண்டுக்கு ரூ.485 கோடி திட்டங்கள் செயல்படுத்த முடிவு’

சணல் உற்பத்திக்கு சுமார் ரூ.485 கோடி திட் டங்களை அடுத்த ஐந்து ஆண்டுக்கு செயல்படுத்த இருக்கிறது என்று கருத்தரங்கில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்திய மண் மற்றும் நீர்வள நிறுவனம்,தேசிய சணல் வாரியம் இணைந்து பங்குதாரர்களுக்கான மண் மற்றும் நீர் மேலாண்மையில் சணல் போர்வைகளை பயன்படுத்துவது குறித்து ஒரு நாள் கருத்தரங்கை நடத்தியது.

கருத்தரங்கை மத்திய ஜவுளித்துறை இணைச் செயலர் சஞ்சய் சரண் தொடங்கி வைத்து பேசியதாவது: இந்தியாவில் சணல் உற்பத்தி அதிகமாகி வருகிறது.

சணல் சார்ந்த பொருட்களுக்கு உலகம் முழுவதும் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. தேசிய சணல் வாரியமும் ,இந்தியமண் மற்றும் நீர்வள நிறுவனமும் நீண்ட கால மாக இணைந்து செயல்படுகிறது.

மண் மேலாண்மையில் சணல் வலை தொழில் நுட்பத்தில் இந்த நிறுவனங்களின் பங்கு திருப்தி அளிக்கிறது. பங்கு தாரர்களுக்கான இந்த ஒருநாள் கருத்தரங்கு மண் மேலாண்மையில் சணல் வலை பயன்பாட்டை அதிகரிக்க உதவும் என்றார்.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சணல் வாரிய ஆணையர் மலாய்சந்தன் சக்கரவர்த்தி பேசியதாவது: சணல் உற்பத்திக்கு மத்திய அரசு வெவ்வேறு திட்டங்களை அறிவுறுத்தி இருக்கிறது. சுமார்ரூ.485 கோடி திட்டங்களை அடுத்து 5 ஆண்டுக்கு செயல்படுத்த இருக்கிறது என்றார்.

இந்திய மண் மற்றும் நீர்வள நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ம.மது, இணையவழியாக பேசியதாவது: நாட்டின் முக்கியமான பாதிப்பாக மண் அரிப்பு இருக்கிறது.

சணல் வலை பயன்பாடு இதில் முக்கிய பங்கு வகிக்கும்.தேசிய அளவிளான மண் மேலாண்மைக்கான சணல்வலை பயன்பாட்டுக்கான ஆராய்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்றார்.

சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு ஜவுளி மேலாண்மை நிறுவன இயக்குநர் அல்லி ராணி, இந்திய சணல் ஆணைய இயக்குநர் ஏ.கே.ஜாலி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இந்திய மண் மற்றும் நீர்வள நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானி ச.மணிவண்ணன் தனது வரவேற்புரையில், மண் மற்றும் சாலை மேம்பாட்டில் சணல் வலைகளை பயன்படுத்துவதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும், உற்பத்தியாளர்கள் மற் றும் பயன்பாடுகளுக்கு இடையே உள்ள கடினத்தை தகர்க்கவும் உதவும் எனக் குறிப்பிட்டார்.

கூ.கண் ணன், முனைவர் கஸ்தூரி திலகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய சணல் வாரிய இணை இயக்குநர் மகா தேவி தத்தா நன்றி கூறினார்.

நாடெங்கிலும் இருந்து 65 அதிகாரிகள் இணையவழியாகவும், 40 அதி காரிகள் கருத்தரங்கில் நேரடியாகவும் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img