Homeபிற செய்திகள்கோவை வேளாண் பல்கலை. பட்டம் பெற விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

கோவை வேளாண் பல்கலை. பட்டம் பெற விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழாவில் பட்டங்கள் பெறுவதற்கு விண்ணப் பிக்ககால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழ கத்தின் 42 ஆவது பட்டமளிப்பு விழா வில் பட்டங்களைப் பெறுவதற்கு 31.3.21 வரையிலான தேர்வு முடிவுகள் அறிவிக்கப் பட்ட மாணவ-மாணவிகள் ஜூன் 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏற் கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் கொரோனா பொதுமுடக் கம், கட்டுப்பாடுகள் காரணமாக விண்ணப் பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 9ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து ஆன்லைன் மூலமாகவும், தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.


உரிய விண்ணப்பக் கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களின் நகல்கள், புகைப்படங்கள் இணைக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் ஜூலை 9 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனவும் இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 0422 6611506 எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img