fbpx
Homeபிற செய்திகள்கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய ஆண்டு விழா

கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய ஆண்டு விழா

கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் 2021–&22 ஆம் ஆண்டு விழா, மேலாண்மை நிலைய வளாகத்தில் நடத்த ப்பட்டது. மேலாண்மை நிலைய துணைப்பதிவாளர்/ முதல்வர் நா.ஸ்ரீதர் வரவேற்றுப் பேசினார்.

கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் / மேலாண்மை இயக்குநர் இந்துமதி, கோவை மண்டல இணைப் பதிவாளர் பார்த்திபன், சிந்தாமணி நிறுவன இணைப் பதிவாளர்/ மேலாண்மை இயக்கு நர் பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

மேலா ண்மை நிலைய முதுநிலை ஆய்வாளர் கார்த்திகைச் செல்வி ஆண்டு அறிக்கை வாசித்தார்.

மேலாண்மை நிலைய பயிற்சியாளர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

துணைப் பதிவாளர்கள் கிருஷ்ணன், பிராங்களின் தாமஸ், ராஜேந்திரன், ராமலிங்கம், மனோகரன், சண்முகவேல் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பயிற்சியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடு களை பயிற்சி நிலைய பணியாளர்கள் வித்யா, சுசீலா, ரத்னவேல், நிர்மல், ராஜபாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img