கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் கேட்டரிங் சயின்ஸ் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை அவுட்லுக் – ஐகேர் 2021 நடத்திய, இந்திய அளவிலான சிறந்த துறைகளுக்கானத் தர வரிசைப் பட்டியலில், 17-வது இடத்தையும், கோவை மாவட்ட அளவில் முதலி டத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
இக்கல்லூரியின் கேட்டரிங் துறையானது தென்னிந்தியாவில் முதன் முதலில் துவங்கப்பட்ட துறை என்ற சிறப்பினைப் பெற்றது. பல்வேறு சாத னைகளைப் புரிந்து கடந்த 35 ஆண்டுளாக இயங்கி வரும் வேலைவாய்ப்பு நிறைந்த துறை என்பது குறிப்பிடத்தக்கது.
அவுட் லுக் – ஐகேர் 2021 ஐந்து பிரத்யேக நிலைகளில் இத்தேர்வினைச் செய்துள்ளது. அதாவது கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறப்பு நிலை, தொழில் இடைமுகம் மற்றும் வேலைவாய்ப்பு, உள் கட்டமைப்பு மற்றும் வசதிகள், நிர்வாகம் மற்றும் மாணவர் சேர்க்கை, பன்முகத்தன்மை மற்றும் வெளிப்பாடு என்ற நிலைகளில் தர வரிசை மேற்கொண்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூ ரிக்கு மகுடத்தைச் சூட்டியுள்ளது.
இக்கல்லூரியின் பிசிஏ துறையானது, இந்திய அளவில் 25-வது இடத்தினையும், கோவை மாவட்ட அள வில் முதலிடத்தையும் பெற்று கணினி சார்ந்த துறைகளுக்கு முன்மாதி ரியாகத் திகழ்கிறது.
அதனோடு முதுகலை சமூகப்பணித் துறை இந்திய அளவில் 27-வது இடத்தையும், அறிவியல் மற்றும் பிபிஏ துறை முறையே 41 மற்றும் 49-வது இடங்களையும் பெற்றுள்ளது.
கோவை மாவட்டத் தில் முதலிடம் பெற்றமைக் காகக் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கும் எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி.லஷ்மிநாராயணசுவாமி பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரி வித்துள்ளார்.



