fbpx
Homeபிற செய்திகள்கோவை சாயிபாபா காலனியில் ‘டிரிக்கர்’ புதிய ஷோரூமை இன்று கே.ஜி.பாலகிருஷ்ணன் திறந்துவைத்தார்

கோவை சாயிபாபா காலனியில் ‘டிரிக்கர்’ புதிய ஷோரூமை இன்று கே.ஜி.பாலகிருஷ்ணன் திறந்துவைத்தார்

கோவை சாயிபாபா காலனி பாரதி பார்க் 7-வது கிராசில் டிரிக்கர் புதிய ஷோரூம் திறப்பு விழா இன்று (6-ம் தேதி) காலை 10 மணிக்கு நடைபெற்றது. விழாவில் கே.ஜி. குரூப் கம்பெனியின் சேர் மன் கே.ஜி.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு டிரிக்கர் புதிய ஷோரூமை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார். விழாவில் தலைமை செயல் அதிகாரி ராஜகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து கே. ஜி.குரூப் கம்பெனியின் சேர்மன் கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:- இந்தியா முழுவதும் டிரிக்கர் ஷோரூம் தொடங்கப்பட்டு உள்ளது. இப்போது தொடங்கப்பட்டது 109-வது கிளையாகும். மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் 100 கிளைகள் தொடங்கப்படும்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யாமல் உள் நாட்டில் தயாராகும் பஞ்சு, நூல் கொண்டு நாங்கள் துணிகளை உற்பத்தி செய்கிறோம். கடந்த ஆண்டு ரூ.60 கோடிக்கு வணிகம் புரிந்துள்ளோம்.

கொரானா பாதிப்பு இல்லா மல் இருந்திருந்தால் ரூ.200 கோடிக்கு வர்த்தகம் நடை பெற்று இருக்கும். வரும் காலங் களில் நிலைமை சீராகும் என எதிர்பார்க்கிறோம்.
தமிழ்நாட்டில் 1000 தொழி லாளர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளேன்.

அமெரிக்கா துபாய் உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஆடை ஏற்றுமதி வணிகம் நடக்கிறது. இதுவரை நாங்கள் ஆயிரம் டிசைன் வடிவமைத்து இருக்கிறோம்.

எங்கள் கம்பெனியின் டிசைன்ஸ் ஸ்டூடியோ கோவை, பெங்களூர், மும்பை ஆகிய இடங்களில் உள்ளன. மாதம் தோறும் புதிய டிசைன் செய்துவருகிறோம். மேற்கண்ட வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img