கோவை,- மேட்டுப் பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தையும், திருச்சி சாலையில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தையும் முதல மைச்சர் காணொலி காட்சி வாயிலாக நாளை திறந்து வைக்கிறார்.
மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பா ளையம் சந்திப்பில் ஹவுசிங் யூனிட் முதல் ராமசாமி கல்யாண மண்டபம் வரை சுமார் ஆயிரம் மீட்டர் நீளத்தில் சுமார் 29 தூண்களுடன் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடந் தது.
இந்த மேம்பால பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளன. கவுண்டம்பாளையம் பகுதியில் சர்வீஸ் சாலை கள் அமைக்கும் பணியும் நிறைவடைந்துள்ளன.
இதேபோல் திருச்சி சாலையில் ரெயின்போ முதல் அல்வெர்னியா பள்ளி வரை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு மேம்பாலங்களும் கட்டி முடிக்கப்பட்டு வெகு நாட்களாகியும் திறக்கப் படாமல் இருந்தது. இதனை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என் றும், கடுமையான வாகன நெரிசலில் சிக்கி தவிப்பத £கவும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த இரண்டு மேம் பாலங்களையும் தமி ழக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் காணொளி காட்சி வாயிலாக நாளை திறந்து வைக்கிறார் என்று அறி விக்கப்பட்டுள்ளது.



