கனரா வங்கி சார்பில் மாபெரும் வீட்டுக்கடன், பழைய மற்றும் புதிய வாகனங்கள் வாங்குவதற்கான கடன் திருவிழா 27.10.2021 (புதன் கிழமை) அன்று நடக்கிறது. இதில், 6.90 சதவீத வட்டியில் வீட்டுக்கடனையும் 7.30 சதவீத வட்டியில் வாகனக் கடனையும் பெறலாம்.
ஒரு லட்சம் ரூபாய்க்கு 659 ரூபாய் முதல் மாதத்தவணை செலுத்தி வீடு கட்ட, வாங்க மற்றும் புதுப்பிக்க கடன் வழங்கப்படுகிறது. 65 வயது வரை கடன் பெற்று 75 வயது வரை திரும்பி செலுத்தும் வசதி உண்டு.
இதே போல் 7.30 சதவீத வட்டியில், வாகனக் கடன் பெறலாம். வாகனத்தின் மதிப்பில் 90 சதவீதம் வரை கடன் வழங்கப்படும். இதற்கு பரிசீலனைக்கட்டணம் ஏதும் இல்லை.
உடுமலை ரோடு NTP காலேஜ் கிளை, வீரபாண்டி பிரிவு ஜோதிபுரம் கிளை, காளப்பட்டி ரோடு நேரு நகர் கிளை, வால்பாறை ரோடு ஜமீன் கொட்டாம்பட்டி கிளை, பாப்பம்பட்டி பிரிவு கண்ணம்பாளையம் கிளை, CRI ட்ரஸ்ட் எதிரில் சரவணம்பட்டி கிளை ஆகியவற்றில் இந்த கடன் திருவிழா நடக்கிறது.
நிபந்தனைகளுக்குட்பட்டு கடன்களை பெற, மேற்கண்ட கனரா வங்கி கிளைகளுக்கு முறையே, 88704 71159, 94422 03573 – 94890 43903, 88704 71159 – 94423 02222, 94447 19376, 94890 43528 – 94890 43457, 94890 43951 – 94890 43522 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
நேரடியாக ஆவணங்களுடன் வந்து கடன் ஆணை பெற்றுக் கொள்ளலாம். இந்த வங்கி கடன் திருவிழாவில் பங்கேற்று பயனடையுமாறு வாடிக்கையாளர்களை வங்கி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.



