கோவை ஆர்எஸ் புரம் பகுதியில் மாநகராட்சி, ஸ்மார்ட் சிட்டி சார்பாக சாலை விழா சம்பந்தமாக சைக்கிள் பயணம் நடைபெற்றது.
அழகான கோவை என்ற தலைப்பில் கோவையில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஸ்மார்ட்சிட்டி திட்டங்கள் குறித்தும் பொது மக்களிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவை மாநகராட்சி சார்பில் இன்று சாலை விழா நடைபெற்றது.
200 க்கு மேற்பட்ட மக்கள் ஆர்எஸ் புரம் பகுதியில் தொடங்கிய சைக்கிள் ஊர்வலம் உக்கடம் வழியாக ரேஸ்கோர்ஸ் வந்து அடைந்தது நிகழ்வில் மாநகர கமிஷனர் ராஜகோபால் சுர்மா தலைமையில் சைக்கிள் ஒட்டும் நிகழ்வு கொண்டாமாக நிறைவேறியது.



