‘உழவே தலை 4.0’ என்ற தலைப்பில், கோவை விவ சாயிகளுக்காக ஒரு நாள் கருத்தரங்கு வரும் ஜூலை 16-ம் தேதி நடைபெறுகிறது.
கோவை, இந்திய தொழில் வர்த்தக சபை, விவசாயிகள், விவசாயம் செய்ய விரும்புவோருக்காக ஆண்டுதோறும் கருத்த ரங்கை நடத்தி வருகிறது.
நான்காவது வருடமாக உழவே தலை 4.0 என்ற ஒரு நாள் கருத்தரங்கை பீளமேடு, இந்துஸ்தான் கலைக் கல்லூரி வளாகத் தில் அமைந்துள்ள அரங் கில் வரும் 16-ம் தேதி நடத்துகிறது.
இந்த வருடம் மரம் வளர்ப்பு அதன் பலன்கள், பயன்கள் அதன் மூலம் கிடைக்கக்கூடிய லாபம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய இந்த கருத்தரங்கம் பல பெரும் வல்லுநர்களைக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள் ளது.
கருத்தரங்கின் முதல் நுழைவுச்சீட்டை திருப்பூர் வனம் இந்தியா பவுண்டே ஷன் செயலாளர் ஸ்கை சுந்தரராஜ், இந்திய தொழில் வர்த்தக சபை முன்னாள் தலைவர் வனிதா மோகன் வழங்க பெற்றுக்கொண்டார்.
இந்த நுழைவுச்சீட்டு மற்றும் அனைத்து தக வல்களையும் கோவை இந்திய தொழில் வர்த்தக சபை அலுவலகத்தைத் தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம்.
தொலைபேசி: 0422-222 4000, 222 4001 மெயில்:admin@iccicbe.in இத்தகவலை கோவை இந்திய தொழில் வர்த்தக சபைத்தலைவர் சி.பாலசுப் ரமணியன் தெரிவித்துள் ளார்.



