கோவையில் நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் 3 கோடியே 17 லட்சம் ரூபாய் செலவில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று தொடங்கி வைத்தார்.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஆட்சியில் கோவையில் பல பகுதிகளில் உள்ள சாலைகள் புதுப்பிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கோவை மாநகராட்சியில் பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்கவும், புதிய சாலைகளை அமைக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின், 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இந்த சாலைகளின் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் அவர் கூறியுள்ளார்.



