fbpx
Homeபிற செய்திகள்கோவையில் உலக தமிழ் பண்பாட்டு மையம் சார்பில் நூல் வெளியீடு,விருதுகள் வழங்கும் விழா மயில்சாமி அண்ணாதுரை...

கோவையில் உலக தமிழ் பண்பாட்டு மையம் சார்பில் நூல் வெளியீடு,விருதுகள் வழங்கும் விழா மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு

கோவை அருகே உள்ள டாக்டர் என்ஜிபி கல்லூரியில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் விரு துகள் வழங்குதல் மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

அது பற்றிய விவரம் வருமாறு: கோவையில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் சார்பில் விருதுகள் வழங் குதல் மற்றும் நூல் வெளியீட்டு விழா இன்று (சனிக்கிழமை) காலை 10.00 மணியளவில் டாக்டர் என்.ஜி.பி.கலையரங்கத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் டாக் டர் என்.ஜி.பி.கல்விக் குழு மங்களின் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி அவர்கள் வரவேற்புரை வழங்கி தொடங்கி வைத்தார்.

உலகத்தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி அவர்கள் இவ்விழாவிற்கு தலை மையேற்று நூல்களை வெளியிட்டுச் சிறப்பு செய் தார்.

உலகத் தமிழ்ப் பண் பாட்டு மையத்தின் செயலர் முனைவர் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்கள் விருது பெரும் விருதாளர்களைப் பற்றிய அறிமுகவுரையாற்றிச் சிறப்பித்தார்.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் மேனாள் இயக்குனர் பத்ம ஸ்ரீ முனைவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் விருதுகளை வழங்கினார்.

உ.வே.சா.தமிழறிஞர் விருது முனைவர் இ. சுந்தரமூர்த்தி அவர்களுக்கும், பெரியசாமித்தூரன் தமிழ்ப் படைப்பாளர் விருது எழுத்தாளர் ச.பால முருகன் அவர்களுக்கும். டாக்டர் நல்ல பழனிசாமி பிறதுறைத் தமிழ்த் தொண்டர் விருது முனைவர் சா.பாலுசாமி அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

சிறப்பு விருதுகள் பேராசிரியர் ப.அருளி, எழுத்தாளர் சூர்யகாந்தன், எழுத்தாளர் தமிழ் மகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. மருத்துவர் க.ராஜேந்திரன் அவர்கள் எழுதிய தாய் – சேய்க்கான சத்தான உணவுகள் நூலை மருத்துவர் செ.சதாசிவம் அவர்கள் அறிமுகம் செய்தார்.

முனைவர் பெ.இரா.முத்துசாமி அவர்கள் இளைஞர்களுக்கான வாழ்க்கைத் திறன்கள் நூலை அறிமுகம் செய்தார். திரு. இயகாகோ என்.சுப்ரமணியம் அவர்கள் தமிழோசை மாணவர் இதழை அறிமுகம் செய்தார்.

முனைவர் இ.சுந்தரமூர்த்தி, எழுத்தாளர் ச.பாலமு ருகன், முனைவர் சா.பாலு சாமி ஆகியோர் மகிழ்வுரை வழங்கினார்கள்.

உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் மதியுரைஞர் முனைவர் பெ.இரா.முத்துசாமி அவர்கள் நன்றியுரை வழங்கினார். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

படிக்க வேண்டும்

spot_img