தேசிய அளவில் நடைபெறும் AICTE FIT INDIA CHALLENGEநான் பிட் என்றால் – இந்தியாவும் பிட் என்ற சவால் நிகழ்ச்சியின், ஓர் அங்கமாக, தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று (டிச.17) மாபெரும் யோகா நிகழ்ச்சி நடந்தது.
கல்லூரி முதல்வர் டாக்டர் வீ.கார்த்திகேயன் துவக்கி வைத்து பேசிய தாவது: தொழில்நுட்பக் கல்வியைப் பெறும் மாணவ மாணவியர், தொழில்நிறுவனங்களில் பணிபுரிவதற்கு ஏற்ப, தங்கள் உடல் மற்றும் மனதினை மேம்படுத்தி வைக்க வேண்டும்.
இதற்காக கடந்த ஓராண்டு காலமாக தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் யோகா, பிரணாயாமம், உடற்பயிற்சி ஆகியவற்றை பாடத் திட்டத்தில் சேர்த்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சோனா – இயற்கை மருத்துவம் மற்றும் மருத்துவக் கல்லூரியின் மருத்துவ ஆசிரியர்களால் யோகா மற்றும் பிரணாயாமப் பயிற்சிகள் தொடர்ந்து அளிக்கப்படு கின்றன என்றார்.
யோகா, பிரணாயாமம் மற்றும் உடற்பயிற்சியினை தொடர்ந்து மேற்கொள்வதால், கற்றல் திறன், ஞாபகசக்தி, கண்பார்வை கூர்மை மற்றும் தன்னம்பிக்கையும், பதட்டத்தை தணித்து, மன அமைதி பெறவும் மிகவும் உதவுகிறது என்று கல்லூரி மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.
கொரோனா தடுப்பு முறைகளைப் பின்பற்றி இந்த மாபெரும் யோகா நிகழ்ச்சியில் மிகுந்த ஆர் வமுடன் கலந்து கொண்ட 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், தேசிய மாணவர் படை அலுவலர்கள், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் ஆகியோருக்கு முதல்வர் வீ.கார்த்திகேயன், யோகா மற்றும் பிரணாயாமப் பயிற்சிகளை வாழ்நாள் முழுவதும் தொ டர்ந்து கடைப்பிடித்து சிறப்பாக வாழ வாழ்த்திப் பாராட்டுக்களைத் தெரிவித்தார்



