காலச்சூழலில் மறந் துபோன, கோவையின் முதல் ரயில் பாதையை மீண்டும் அளவீடு செய்ய வேண்டும்; இவ்வழித்தடத்தில் ரயில்களை இயக்க வேண்டும் என்கிற கோரிக்கைக் குரல், கொங்கு மண்டலத்தில் இருந்து ஒலிக்கத் துவங்கி இருக்கிறது.
கோவையில் வசிப்போரில் பெரும்பாலோனார் கலெக்டர் ஆபீசுக்கு அருகே உள்ள ரயில்வே ஸ்டேஷன், போத்தனூர் மற்றும் வடகோவை ரயில்வே ஸ்டேஷன்களை மட்டுமே அறிந்து வைத்திருக்கின்றனர்.
கோவையின் முதல் ரயில் பாதையை அறிந்திருக்க வாய்ப்பில்லாமல், மறக்கடிக் கப்பட்டு விட்டது. அதாவது, 1891ல் கோவை – போத்தனூர் ரயில் பாதை மற்றும் இருகூர் -போத்தனூர் பாதையை இணைக்கும் வகையில், ராமநாதபும் – நஞ்சுண்டாபுரம் (கன்னிமார் கோவில்) இடையே ஆங்கிலேயர் காலத்தில் இணைப்பு ரயில் பாதை அமைக்கப்பட்டது.
இதுவே, கோவையின் முதல் ரயில் பாதை.பழமை வாய்ந்த நீலகிரி எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையத்தில் இருந்து பாகிஸ்தான் பெசாவர் நகருக்கு ‘கிராண்ட் டிரங்க்‘ இணைப்பு எக்ஸ்பிரஸ் இவ்வழித்தடத்தில் சென்றிருக்கிறது.
அக்காலத்தில், நான்கு இடங்களில் அமைக்கப் பட்ட சிறிய தரைமட்ட ரயில்வே பாலங்களும், டிக்கெட் வழங்கப்பட்ட இடமான ‘கேட் லாட்ஜ்’ கட்டடமும் இதற்கு சாட்சிகளாக நிற்கின்றன.
இந்த பழமையான வழித்தடம், புதிய ரயில் பாதை அமைப்பு காரணமாக, காணாமல் போய் விட்டது. இவ்வழித்தடத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர, கொங்கு மண்டலத்தில் இருந்து கோரிக்கை குரல் ஒலிக்கத் துவங் கியிருக்கிறது.
சேலம் கோட்ட ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் ஜெயராஜ் கூறியதாவது: ஆங்கிலேயர் காலமான, 1891ல் இந்த இணைப்பு ரயில் பாதை அமைக்கப்பட்டது. கடந்த, 1929, ஏப்., 1 முதல், மேட்டுப்பாளை யத்தில் இருந்து பாகிஸ்தான் பெசாவர் நகருக்கு இயக்கப்பட்ட ‘கிராண்ட் டிரங்க்‘ இணைப்பு எக்ஸ்பிரஸ் சென்று வந்த தடம், இது.
கோவை – வடகோவை, பீளமேடு – இருகூர் ரயில் பாதை போடப்பட்ட பிறகு இப்பாதை பிரித்து எடுக்கப்பட்டது. இது, மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தால், கோவை ஸ்டேஷனில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
நீலகிரி எக்ஸ்பிரஸ்க்கு இன்ஜின் மாற்றத் தேவையில்லை. கோவையில் இருந்து புறப்படும் சில ரயில்களை, மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்குவது போன்ற பலன்கள் ஏராளமாக கிடைக்கும்.
இச்சிறிய இணைப்பு ரயில் பாதை திட் டத்தை தெற்கு ரயில்வேகையில் எடுத்தால், வரும் நாட்களில் சுற்றுவட்ட புறநகர் மின்சார ரயில்களை இயக்கவும் வழி கிடைக்கும்.
இளம் தலைமுறையினர், ரயில்வே அதிகாரிகளுக்கு இப்பாதை பற்றித் தெரியாது. ரயில்வே நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, உடனே அளவீடு செய்து, ஆக்கிரமிப்பில் இருந்து நிலத்தை மீட்க வேண்டும்.
சேலம் கோட்டத்துக்கு இது குறித்து கடிதம் அனுப்பியுள் ளேன். இவ்வாறு, அவர் கூறினார். கோவை எம்.பி., நடராஜனிடம் இதுபற்றிக் கேட்ட போது, நேரில் இப்பகுதியை பார்வையிட்டு, சேலம் கோட்ட அதிகாரிகளை வரவழைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
நாடாளுமன்றத் திலும் இதற்காக குரல் கொடுப்பேன், என்றார்.
சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஸ்ரீநிவாஸ் கூறுகையில், பழைய ரயில் பாதை இருந்த இடத்தில், ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்வர்.
ஆக்கிரமிப்பு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது குறித்து மேலிடத்துக்கு கோரிக்கைகளும், பரிந்துரைகளும் அனுப்பப்படும், என்றார்.



