மாவட்ட கலெக்டர் வினீத் திருப்பூர் மாவட்டம், குமார் நகர் கதர் அங்காடி வளாகத்தில், காந்தியடிகள் பிறந்தநாள் விழா மற்றும் கதர் சிறப்பு விற்பனை துவக்க விழா நிகழ்ச்சியில் காந்தியடிகள் திருவுருவ படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் கதர் கிராம தொழில்கள் உதவி இயக்குநர் ரவிக்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதீஸ்குமார் உள்ளனர்.



