fbpx
Homeபிற செய்திகள்கோமாரி தடுப்பூசி முகாமை துவக்கினார், தருமபுரி எம்.எல்.ஏ வெங்கடேஷ்வரன்

கோமாரி தடுப்பூசி முகாமை துவக்கினார், தருமபுரி எம்.எல்.ஏ வெங்கடேஷ்வரன்

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், டொக்கு போதன அள்ளி ஊராட்சி, பூவல்மடுவு கிராமத்தில் நேற்று கால்நடை பராமரிப் புத்துறை சார்பில் நடைபெற்ற கால்நடை களுக்கான கோமாரி தடுப்பூசி முகாமை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் தொடங்கி வைத்தார்.

கால்நடை வளர்க்கும் விவசாயிகள், கால்நடை இறப்பை தடுக்க தவறாமல் இம்முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி, கால்நடைகள் வளர்ப்போரிடம் கால் நடைகளுக்கான தாது உப்புகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் பாமக மாவட்ட செயலாளர் பெ.பெரியசாமி, ஒன்றிய செயலாளர் வ.அறிவு, முத்து, அர்ஜூனன், சித்ரா குமார், முருகன், ராணி சுப்ரமணி, சேட்டு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img