செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் குறை கேட்பு முகாமில் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு தொழிலாளர் நலத்துறையின் சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு நிதி உதவித் தொகைக்கான ஆணையை வழங்கினார். உடன் மாவட்ட கலெக்டர் வினீத், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ராஜ்குமார் ஆகியோர் உள்ளனர்.



