fbpx
Homeபிற செய்திகள்கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் கழுத்தில் கயிறு இறுகி ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய காட்டு...

கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் கழுத்தில் கயிறு இறுகி ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய காட்டு மாடு மீட்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே தாந்தநாடு கிராமம் அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து உணவை தேடி தேயிலை தோட்டத்திற்கு வந்த காட்டு மாட்டின் கழுத்தில் கயிறு இறுகி ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி வந்தது

அப்பகுதிக்கு தேயிலை பறிக்க சென்ற தொழிலாளிகள் காட்டு மாட்டை கண்டு உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு வந்த வனத்துறையினர் துணிச்சலாக காட்டு மாட்டின் அருகில் சென்று காட்டு மாடு ஒத்துழைப்புடன் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிற்றை அறுத்து காப்பாற்றினார்கள்.

இதனை தொடர்ந்து காட்டுமாடு தேயிலை தோட்டம் வழியாக அருகில் இருந்த வனப் பகுதிக்குள் சென்று விட் டது.

இந்த முயற்சியில் ஈடுபட்ட வனவர் பெலிக்ஸ், வனக்காவலர் ராஜேஷ், வனக்காப்பாளர் சிவக்குமார், வேட்டை தடுப்பு காவலர் கௌதம், ஆகியோரை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img