கோவையில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் இங்கு பணியில் உள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரு கிறது. அதோடு ஒமைக்ரான் அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஞாயிறன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இரவு நேர ஊரடங்கும் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு தொ ழில் நிறுவனத்தினரும் அச்சமடைந்துள்ளனர்.
முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டால் இங்கு பணியில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கி¬ டக்காமல் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
இந்த சூழலில் கோவையில் பணியில் உள்ள வட மாநிலத் தொழி லாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். தினமும் கோவை ரயில் நிலையத்திற்கு வரும் வட மாநில தொழிலாளர்கள் இங்கிருந்து ரயில்கள் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
பெரும்பாலான வடமாநில தொழிலாளர்கள் கோவையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதால், உற்பத்தி தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



