fbpx
Homeபிற செய்திகள்குடிநீர் மேல்நிலைத்தொட்டி கட்டும் பணியை துவக்கி வைத்த கோவை மேயர்

குடிநீர் மேல்நிலைத்தொட்டி கட்டும் பணியை துவக்கி வைத்த கோவை மேயர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19க்குட்பட்ட சுதர்சன் அவென்யூ பகுதியில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலைத்தொட்டி கட்டும் பணியை பூமி பூஜை செய்து மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தபோது எடுத்த படம்.

உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், 24*7 குடிநீர் திட்ட ஆலோசகர் கோபாலகிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பையா கிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர்கள் கதிர்வேலுசாமி, தவமணி பழனியப்பன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img