fbpx
Homeபிற செய்திகள்ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.80 கோடியில் வளர்ச்சி பணி- தர்மபுரி கூடுதல் ஆட்சியர் ஆய்வு

ஏரியூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.5.80 கோடியில் வளர்ச்சி பணி- தர்மபுரி கூடுதல் ஆட்சியர் ஆய்வு

தர்மபுரி மாவட்டம், ஏரியூர் ஊராட்சி ஒன்றி யத்தில் நடைபெற்று வரும் ரூ.5 கோடியே 80 இலட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளை கூடுதல் ஆட்சியர் மரு.இரா.வைத்திநாதன் ஆய்வு செய்தார்.

கோடிஅள்ளி ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.5.25 இலட்சம் மதிப் பீட்டில் சமூக சுகாதார வளாகம் கட்டும் பணி, அதே ஊராட்சியில் ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.1 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஆகியவை நடக்கின்றன.

சுஞ்சல்நத்தம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.24.535 இலட்சம் மதிப் பீட்டில் நாற்றுப் பண்ணை அமைக்கும் பணி, அதே ஊராட்சியில் ரூ.17லட்சம் மதிப் பீட்டில் ஈச்சம்பாடி ஓடையில் புதிய தடுப் பணை அமைக்கும் பணி, ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.325 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் கட் டும் பணி, பிரதம மந்திரி கிராம சாலை இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ.200.587 இலட்சம் மதிப்பீட்டில் காமராஜ்பேட்டை சாலை முதல் தின்னபெள்ளூர் சாலை வரை தார் சாலை அமைக்கும் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.83 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஆகியவை மேற்கொள்ளப் ட்டுள்ளன.

இப்பணிகளை கூடுதல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலு வலர் ஆர்.ஆறுமுகம், எம்.ஜெயராமன் உதவி பொறியாளர் சீனிவாசன், பணி மேற்பார்வையாளர் செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img