fbpx
Homeபிற செய்திகள்காவேரிபட்டடிணத்தில் எருதுவிடும் விழா - இளைஞர்கள் ஆர்வம்

காவேரிபட்டடிணத்தில் எருதுவிடும் விழா – இளைஞர்கள் ஆர்வம்

காவேரிப்பட்டணத்தில் எருதுவிடும் விழா நிகழ்ச்சி ஸ்ரீ சக்தி விநாயகர் கோயில் மண்டில் 144 ஆம் ஆண்டு வன்னிய குல சத்திரியர் சார்பில் நடந்தது.

காவேரிப்பட்டினம் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து கூலி மாடுகள் ஊர்வலமாக வந்து மண்டில் விளையாடியது. இதனை பிடிக்கவும், விரட்டவும், ஆர்வமாக இளைஞர்கள் கலந்து கொண்டு விளைய£டினர்.

சுமார் 20க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டது. ஊர்கவுண்டர் மகேந்திரன் தலைமையில் எருதுவிடும் விழா நடைபெற்றது.நிகழ்ச்சியில் சார்லஸ், தக்காளி தவமணி, சின்னசாமி, வக்கீல் ரவிச்சந்திரன், பசுபதி ,வெங்கடேசன், மாதேசன், ஆசிரியர் பவுன்ராஜ் ,ஆகியோர் கலந்துகொண்டு விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

விழாவில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை காவேரிப்பட்டினம் காவல் ஆய்வாளர் முரளி தலைமையிலும், துணை ஆய்வாளர்கள் அறிவழகன், ராஜா, மற்றும் சத்தியன் ,ஆகியோர் உள்பட மேலும் 25க்கும் மேற்பட்ட காவல்துறையினர் செய்திருந்தனர்.

எருது ஆட்டம் நடைபெறும் இடத்தை சுற்றி பேரிகார்டு அமைத்து பொதுமக்கள் உள்ளே நுழையாத படி ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

படிக்க வேண்டும்

spot_img