fbpx
Homeபிற செய்திகள்கருணாநிதி மூன்றாவது ஆண்டு நினைவு தினம்: அன்னதானம், இலவச நோட்டு புத்தகங்கள்-கோவை சுகுணாபுரம் பகுதி திமுக...

கருணாநிதி மூன்றாவது ஆண்டு நினைவு தினம்: அன்னதானம், இலவச நோட்டு புத்தகங்கள்-கோவை சுகுணாபுரம் பகுதி திமுக வழங்கியது

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மூன்றாவது ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தி.மு.க.தொண்டர்கள், அவரவர் வீட்டு வாசலிலேயே கலைஞர் படம் வைத்து அஞ்சலி செலுத்த வேண்டும் என தொண்டர் களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன்படி கோவை சுகுணா புரம் பகுதி கழக தலைவர் மு.ராஜேந்திரன் அவரது வீட்டின் முன்பாக வைக்கப்பட்டிருந்த கருணாநிதி திருவுருவ படத்திற்கு மாலை அணி வித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து அவர், சுகுணாபுரம் பகுதி கழகத்திற்கு உட்பட்ட 92 வது வட்டம் மைல்கல் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலை ஞரின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து அந்த பகுதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

குளத்துப்பாளையம், எம்.ஜி.ஆர்.நகர் உள்ளிட்ட சுகுணாபுரம் பகுதி கழகத் திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு, அந்த பகுதி மக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் சுகுணாபுரம் பகுதி கழக நிர்வாகிகள், கோவிந்தன், ஜான்சன் நாகராஜ், சுகுமார், ரக மத்துல்லா, ஜாபர், முத்துவேல், கே.பி நாகராஜ், மதியழகன் அன்பு ரோஸ் ராமராஜ், நாக மாணிக்கம் மற்றும் மல்லிகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img