கூடுதல் நேரம் அதிகரிக்க திருப் பூர் வடக்கு ஒன்றி யம் அனைத்து வியாபாரிகள் நல சங்கம் சார்பாக இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்
அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது: 13 ஊராட்சிகள் பகுதியில் 500க்கும் மேற்பட்ட பல்வேறு விதமான கடைகள் செயல்பட்டு வருகிறது நீங்கள் அறிவித்த கொரோனா கட் டுப்பாடுகளை நாங்கள் பின்பற்றி வருகிறோம்.
மாவட்ட ஆட்சியர் ஏற்க னவே ஒரு மணி நேரம் கூடு தலாக அறிவித்து மாலை 6 மணி வரை கடைகள் திறக்கலாம் என அறிவித்திருந்தார். கிராம புறத்தில் இருப்பவர்கள் வேலை க்கு சென்று வந்து பொருட்களை வாங்கிச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது
மேலும் கிராமப்புற வணி கர்களுக்கு நேர கட்டுப்பாடுகளால் சிறு குறு வியாபாரிகள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படைகிறது ஊராட்சி பகுதிகளில் கொரோனா நோய்த் தொற்று மிகவும் குறைவாக உள்ளது என்பதையும் கருத்தில் கொண்டு தாங்கள் 13 ஊராட் சிகளில் இயங்கி வரும் அனைத்து கடைகளுக்கும் மேலும் இரண்டு மணி நேரம் இரவு 8 மணி வரை கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்க வேண்டும்‘ இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதில் தலைவர் தியாகராஜன், செயலாளர் சந்திரசேகர் பொருளாளர் கண்ணன் உட்பட அனைத்து வியாபா ரிகள் நலச்சங்க நிர்வாகிகள் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்.



