கோவையில் அமை ந்துள்ள இந்திய கடற் படையின் முதன்மை பயிற்சி நிறுவனமான ஐஎன்எஸ் அக்ரானியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
சிஎம்டிஇ அசோக் ராய், விஎஸ்எம் கட்டளை அதிகாரி, ஐஎன் எஸ் அக்ரானி மற்றும் ஸ்டேஷன் கமாண்டர், கோவையில் உள்ள போர் நினைவிடத்தில், சுதந்திர போராட்ட வீரர்கள் மற் றும் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தினர்.
கடற்படைத் தளபதி, கொடி அதிகாரி தலைமைத் தளபதி, தெற்கு கடற்படை கட்டளை, மற்றும் திறமை விருது வென்றவர்கள் போன்ற அனைத்து சேவை மற்றும் பாதுகாப்பு சிவில் விருது பெற்றவர்களை உயர் குழு அமைப்பு கட்டளை அதிகாரி கவுரவித்தார்.
கோவிட் -19 தொற்று நோயின் பின்னணியில், தங்கள் வேலைகளில் பக்தியையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்திய நிறுவனத்தின் சேவை மற்றும் பொதுப் பணியாளர்களுக்கு திறமை சான்றிதழ்கள் மற்றும் ரொக்க விருதுகள் வழங்கப்பட்டன.
வீரர்கள், என்சிசி பயிற்சி மாணவர்கள், கோவை நேவி குழந்தைகள் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், கோவையில் உள்ள கடற்படை பிரிவுகளில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.



