fbpx
Homeபிற செய்திகள்கடத்தூர் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கூடுதல் ஆட்சியர் ஆய்வு

கடத்தூர் ஒன்றியத்தில் வளர்ச்சி பணிகளை கூடுதல் ஆட்சியர் ஆய்வு

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றி யத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கூடுதல் ஆட்சியர் இரா.வைத்திநாதன் ஆய்வு செய்தார்.

கோபிசெட்டிபாளையம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட் டத்தின் கீழ் ரூ.1.35 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் சமுதாய பண் ணைக்குட்டை அமைக்கும் பணி, அதே ஊராட்சியில், புதியதாக பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைத்திட இடம் பார்வையிடப்பட்டது.

ஒசஅள்ளி ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய சுகாதார வளாகம், ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் பசுமை வீடு கட்டும் பணி மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.6.78 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் அமைக்கும் பணி ஆகியவற்றை கூடுதல் ஆட்சியர் இரா.வைத்திநாதன் பார்வையிட்டார்.

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவிசந்திரன், ரங்கநாதன், உதவி பொறியாளர் கள் சண்முகம், பணிமேற்பார்வையாளர் அன்பழகன், அன்னபூரணி, சம்மந்தப்பட்ட துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img