fbpx
Homeபிற செய்திகள்ஓய்வூதியம் பெறுவோருக்கு மருத்துவ காப்பீடு திட்டம் வழங்க கோரிக்கை

ஓய்வூதியம் பெறுவோருக்கு மருத்துவ காப்பீடு திட்டம் வழங்க கோரிக்கை

திருச்சியில் பேங்க் ஆப் இந்தியா ஓய்வு பெற்றவர்கள் கூட்டமைப்பின் பொது உறுப்பினர்கள் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரவி மினி ஹாலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் வரதராஜன் தலைமை தாங்கினார்.

செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் ஜம்புநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் பென்ஷன் உயர்வு வழங்க வேண்டும், ஓய்வூதியம் பெறுவோருக்கு மருத்துவ காப்பீடு திட்டம் வழங்க வேண்டும், ஜிஎஸ்டி வரியை குறைக்கவும் அல்லது நீக்கவும் வழிவகை செய்ய வேண்டும்

மேலும் 1-1-86க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு பென்ஷன் தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img