fbpx
Homeபிற செய்திகள்ஒலிம்பியாட் 2022 போட்டி கேம்போர்டு பள்ளி மாணவ மாணவிகள் உருவாக்கிய பிரமாண்ட “செஸ் தம்பி” சின்னம்

ஒலிம்பியாட் 2022 போட்டி கேம்போர்டு பள்ளி மாணவ மாணவிகள் உருவாக்கிய பிரமாண்ட “செஸ் தம்பி” சின்னம்

உலக செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டி மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10 – ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 187 நாடுகளை சேர்ந்த 2500 செஸ் வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த உலக செஸ் ஒலிம்பியாட் – 2022 போட்டியை விளம்பரப்படுத்தும் விதமாக கோவை மணியகாரன் பாளையத்தில் உள்ள கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவி மாணவிகளால் உருவாக்கப்பட்ட 40 அடி உயரம் 20 அடி அகலம் உடைய 800 சதுர அடி கொண்ட “செஸ் தம்பி” சின்னம்பிரமாண்டமாக வரையப்பட்டு உள்ளது. இது காண்போர் அனைவரையும் மிகவும் கவர்ந்து உள்ளது.

இதுகுறித்து கேம்போர்டு சர்வதேச பள்ளியின் தாளாளர் என்.அருள்ரமேஷ், தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ், முதல்வர் பூனம் சியல் ஆகியோர் கூறியதாவது:- உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி வருகிற 28ந் தேதி முதல் ஆகஸ்டு 10ந்தேதி முடிய சென்னை மாமல்லபுரத்தில் நடக்கிறது.

இந்த போட்டி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியாக கேம்போர்டு இன்டர் நேஷனல் பள்ளி வளாகத்தில் 7ம் வகுப்பு, 8-ம் வகுப்பு பயிலும்மாணவ மாணவிகள் இந்த சாதனை நிகழ்ச்சியை அற்புதமாக 800 சதுர அடியில் 2 மணி நேரத்தில் அமைத்து உள்ளது பாராட்டத் தக்கது.

மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்

படிக்க வேண்டும்

spot_img