ஜெஇஇ(JEE) முதன்மைத் தேர்வு 2022 தேர்வின் முதல் அமர்வில், கோவையில் உள்ள ஆகாஷ் BYJU-ன் 4 மாணவர்கள், 99 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று பெருமைப்படுத்தியுள்ளனர்.
இந்த ஆண்டு நடை பெறவிருந்த பொறியியல் படிப்புக்கான இரண்டு கூட்டு நுழைவுத் தேர்வு களில் இதுவே முதல் முறையாகும்.அதிக மதிப்பெண் பெற்ற எம்.ஸ்ரீபிரதா 99.85, எஸ். நிகில் 99.84, கே.எம். பிரித்வின்சிபி 99.31 மற்றும் சுதீப் 99.08. “ஆகாஷ் பைஜூஸ் எங்களுக்கு உதவியதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என்று மாணவர்கள் கூறினர்.
ஆகாஷ் பைஜூஸ் நிர் வாக இயக்குநர் ஆகாஷ் சவுத்ரி கூறியதாவது:
JEE முதன்மை 2022 முதல் அமர்வுக்கு நாடு முழுவதும் இருந்து சுமார் 9 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட கல்வி ஆண்டுகளில், ஜெஇஇ இல் மாணவர்களை அதிக சதவீத மதிப்பெண் பெற்றவர்களாக மாற்ற ஆகாஷ் பைஜூஸ் கூடுதல் மைல் சென்றது. நாங்கள் ஆய்வுப் பொருட்களையும், கேள்வி வங்கிகளையும் ஆன்லைனில் அணுகும்படி செய்துள்ளோம்.
தேர்வுத் தயாரிப்பு மற்றும் நேர மேலாண்மைத் திறன்கள் குறித்து பல மெய்நிகர் ஊக்க அமர்வுகள் மற் றும் கருத்தரங்குகளை நடத்தினோம். எங்க ளது முயற்சிகள் பலனளிப் பதைக் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அது எங் கள் மாணவர்களின் மதிப் பெண் பட்டியல்களில் இருந்து தெரிகிறது.
பலர் தங்கள் விருப்பப்படி உயர் படிப்பைத் தொடர உயர் மட்ட ஐஐடி அல்லது என்ஐடி அல்லது மத்திய அரசின் பொறியியல் கல்லூரியில் சேர்க்கை பெறுவதற்கான பாதையில் உள்ளனர் என்றார்.
ஜெஇஇ (முதன்மை) மாணவர்கள் தங்கள் மதிப் பெண்களை மேம்படுத்த பல வாய்ப்புகளை வழங்க இரண்டு அமர்வுகள் நடத்தப்படுகின்றன. ஜேஇஇ அட்வான்ஸ்டு என்பது இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறு வனங்களில் (ஐஐடி) சேர்க்கைக்கு மட்டுமே என்றாலும், ஜேஇஇ மெயின் என்பது பல தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி) மற்றும் இந்தியாவில் உள்ள பிற மைய உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கானது.
ஜேஇஇ அட்வான்ஸ்டுக்கு அமர் வதற்கு மாணவர்கள் ஜேஇஇ மெயின் தேர்வு எழுத வேண்டும்.



