fbpx
Homeபிற செய்திகள்ஒப்போ ரெனோ 6 சீரிஸ் அறிமுகம்

ஒப்போ ரெனோ 6 சீரிஸ் அறிமுகம்

ஒப்போ ரெனோ6 ப்ரோ 5ஜி, ஒப்போ ரெனோ6 5ஜி ஆகிய புதிய வகை ஸ்மார்ட் போன்கள் சந்தையில் அறிமுகப்பட்டுள்ளன. ரெனோ6 சீரிஸ் அறிமுகம் குறித்து ஒப்போ இந்தியாவின் தலைமை சந்தைப்படுத்துதல் அலுவலர் தமயந் சிங் கனோரியா கூறியதாவது:

மிகச் சிறந்த காட்சித் திறன், அசரவைக்கும் வடிவமைப்பு, ஆற்றல் மிக்க செயல்பாடு, ஈடு இணையற்ற அனுபவத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யவே ரெனோ6 சீரிஸை அறிமுகப்படுத்தி உள்ளோம்.

பயனர்கள் போர்ட்ராய்ட்கள் படம் பிடிக்கும் போது ஒரு நிபுணத்துவ நிலை அனுபவத்தை வழங்குகிறது இந்த ரெனோ5 ஜி சூப்பர் போன்.

உண்மையிலேயே எதிர்காலத்திற்கான ஸ்மார்ட் போனாக இந்த ரெனோ6 சீரிஸ் இருக்கும் என்றார்.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் வர்த்தகத் தலைவர் ஆரிப் முகமது பேசுகையில், எங்களது பிளிப்கார்ட் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு சமீபத்திய தொழில்நுட்பத்தையும் மிகச்சிறப்பான தயாரிப்புகளையும் வழங்குவதில் உறுதி கொண்டுள்ளது.

இந்த நோக்கத்துடன் ஒப்போ ரெனோ6 ப்ரோ 5ஜி மற்றும் ஒப்போ ரெனோ6 5ஜி அறிமுகப்படுத்தப்படுகின்றன.

பிளிப்கார்ட் ஸ்மார்ட் அப்கிரேடு திட்டம் மூலமாக ஸ்மார்ட்போன் விலையில் 70 சதவீதத்தை மட்டும் செலுத்தி ஒப்போ ரெனோ6 5ஜியை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களை அப்டேட் செய்வதற்கு இது மிகச்சிறப்பான வழியாகும். அதனால் அவர்களது ஆசைகளை நிறைவேற்றுவதில் விலை ஒரு தடையாக இருக்காது என்றார்.

ரெனோ6 சீரிஸ் உடன் புதிய அம்சங்களுடன் கூடிய ஒரு நீல வண்ண என்ஹாக்ஸ் (EncoX) குறித்த அறிவிப்பையும் ஒப்போ வெளியிட்டுள்ளது. டைனாடியோ சிம்பிள் அண்ட் கிளியர் (Dynaudio Simple and Clear) அதிகபட்ச அதிர்வெண்களை பிரகாசமானதாக்குகிறது; அதே நேரத்தில் டைனாடியோ வார்ம் அண்ட் சாப்ட் (Dynaudio Warm and Soft) இசையை மென்மையாக்கி அதனை இனிமையாக்குகிறது.

5ஜி சூப்பர் போன் ஆன ரெனோ6 ப்ரோ 5ஜி சில்லரை விற்பனையகங்களிலும், பிளிப்கார்ட்டிலும் ரூ.39,990-ல் கிடைக்கும், ரெனோ6 5ஜி பிளிப்கார்ட்டில் ரூ.29,990-ல் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img