fbpx
Homeபிற செய்திகள்எஸ்பிஐ இந்திய ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிப்பு

எஸ்பிஐ இந்திய ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிப்பு

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) இந்திய ராணுவத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பித்து கொண்டது.

சிறப்பாக வடிவமைக்கப் பட்ட பலன்கள் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவற்றின் தொகுப்புகளை, அவர்களது பாதுகாப்பு படை சம்பள தொகுப்பு வாயிலாக, பணியிலி ருப்பவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்குகிறது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் ராணுவம் மற்றும் வங்கியைச் சார்ந்த வந்திருந்த மூத்த அதிகாரிகள் முன்னிலையில் டெல்லியில் கையெழுத்தானது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், தனிப்பட்ட விபத்து காப்பீடு (இறப்பு) மற்றும் விமான விபத்து காப்பீடு (இறப்பு) உள்ளடக்கிய நீட்டிக்கப்பட்ட பலன்களை எஸ்பிஐ இலவசமாக வழங்குகிறது.

ராணுவ ஊழியர்களின் சேவை மற்றும் நாட்டை நிர்மாணிப்பதில் அவர்களின் பங்களிப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், சேவை கட்டணத்தில் தள்ளுபடி மற்றும் பல்வேறு இலவச பலன்களுடன் கூடிய பூஜ்ய இருப்பு வங்கி சேமிப்பு கணக்கு சேவையையும் வழங்குகிறது.

இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்வில், எஸ்பிஐ வங்கியின் தலைவர் தினேஷ் காரா கூறுகையில், நாட்டின் மற்றும் குடிமக்களின் பாதுகாப்புக்காக தங்களின் இன்னுயிரை அர்ப்பணிக்கும் ராணுவ ஊழியர்களுடன் இணைந்திருப்பதற்கு சிறப்பாக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதில் எப்போதும் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

ராணுவ வீரர்களுக்கு அதன் பாதுகாப்பு துறை சம்பள தொகுப்பு (ராணுவம்) வாயிலாக, சிறப்பாக உருவாக்கப்பட்ட பலன்களின் தொகுப்பை எஸ்பிஐ பணிவுடன் வழங்குகிறது. இது வங்கியின் வசதிகளை அவர்களும், அவர்களது குடும்பத்தினரும் எளிதாக பெறுவதை உறுதி செய்கிறது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பணியிலிருக்கும் ராணுவ வீரர்கள், ஓய்வூதியத £ரர்கள், அவர்களின் குடும்பத்தினர்களின் தேவைகளுக்கு சிறப்பாக பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படையினர் மீதான வங்கியின் ஈடுபாட்டின் ஒரு பகுதியாக, பாதுகாப்புத் துறை சம்பள தொகுப்பின் கீழ் உள்ள அனைத்து ராணுவ வீரர்களுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பலன்களை எஸ்பிஐ தானாகவே நீட்டித்து வழங்கும் என்றார்.

தற்செயலாக, இந்திய விமானப்படைக்கு சொந்தம £ன ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த 8 பேரின் உறவினர்களை வங்கி அணுகி, எஸ்பிஐயின் பாதுகாப்பு படை சம்பள தொகுப்பு திட்டத்தின் கீழ் கிடைக்கக் கூடிய காப்பீட்டு கோரிக்கைகளை 24 மணி நேரத்துக்குள் காப்பீட்டு நிறுவனங்கள் மூலமாக கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தது.

படிக்க வேண்டும்

spot_img