கோவையில் போலீசாருக்கான குறை தீர்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. இதில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டு ஆய்வு செய்தார்.
கோவை அவினாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் காவலர்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவை வந்துள்ள டிஜிபி சைலேந்திரபாபு இன்று குறைதீர்க்கும் முகாமுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதில் போலீசார் தங்கள் குறைகள் சம்பந்தமான மனுக்களை அளித்தனர். இந்த முகாமில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார், டிஐஜி முத்துசாமி, கோவை மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த முகாமில் மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த ஏடிஎஸ்பி முதல் போலீசார் வரை 853 பேர் மனு அளித்தனர்.



