fbpx
Homeபிற செய்திகள்உதகையில் 16 கி.மீ. ஓட்டப்பயிற்சி மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு

உதகையில் 16 கி.மீ. ஓட்டப்பயிற்சி மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று முன்தினம் (17ம் தேதி) மருத்துவத்துறையில் பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் மருத்துவ கட்ட மைப்புகளை தொடங்கி வைக்கும் நிகழ்வுகளுக்காக நீலகிரி மாவட்டம் வந்தார்.

அதிகாலை 5 மணிக்கு தொட்டபெட்டாவில் தொடங்கி கட்டபெட்டு கிராமம் வரை 16 கிலோ மீட்டர் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டு, கட்ட பெட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத் தை திடீர் ஆய்வு மேற் கொண்டார்.

அங்கு சிகிச்சை பெற வந்த பொதுமக்களிடம் நலம் விசாரித்து, மருத்துவர்கள், செவிலியர்கள் இடம் மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

அந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்று சுவர் மற்றும் குடிநீர் வசதி வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது அதை உடனடியாக நிறை வேற்றித் தருவதற்கு உரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

படிக்க வேண்டும்

spot_img