Homeபிற செய்திகள்தேசிய தாய்பாக்ஸிங்கில் 10 பதக்கங்கள் வென்று கோவை வீரர்கள் சாதனை

தேசிய தாய்பாக்ஸிங்கில் 10 பதக்கங்கள் வென்று கோவை வீரர்கள் சாதனை

மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் நகரில் நடந்த 17வது தேசிய தாய்பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை மாவட்ட வீரர், வீராங்கனைகள் 3 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
ஆகஸ்ட் 21 முதல் 23 வரை நடந்த போட்டியில், நாடு முழுவதும் இருந்து 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அணியில் 85 வீரர்கள் பங்கேற்ற நிலையில், கோவை மாவட்ட தாய்பாக்ஸிங் சங்கம் சார்பில் கென்ஷு கலை மற்றும் விளையாட்டு அகாடமி, சான் தற்காப்புக் கலை அகாடமியைச் சேர்ந்த 10 பேர் கலந்து கொண்டனர். தேசிய போட்டியில் சிறப்பாக செயல்பட்ட கோவை வீரர்கள், நவம்பரில் கோவாவில் நடைபெறும் உலக தாய்பாக்ஸிங் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். பதக்கம் வென்ற வீரர்களுக்கு சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img