Homeபிற செய்திகள்முதலுதவி, குழந்தைகள் பாதுகாப்பில் இரண்டு உலக சாதனை

முதலுதவி, குழந்தைகள் பாதுகாப்பில் இரண்டு உலக சாதனை

இந்திய மருத்துவ சங்கம் கோவை கிளை, எஸ்.என்.எஸ் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து, எஸ்.என்.எஸ் வளாகத்தில் முதலுதவி மற்றும் குழந்தைகள் பாது காப்பு குறித்த 2 உலக சாதனை முயற்சிகளை மேற்கொண்டனர்.

இதில் 2,500க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரி யர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பங்கேற்ற னர். 14 மருத்துவர்கள் சி.பி.ஆர் செயற்கை சுவாசம், மூச்சுத்திணறல் உள்ளிட்ட அவசர முத லுதவி பயிற்சிகளை வழங்கினர்.

எலைட் உலக சாதனையின் தூதர் மற்றும் மூத்த நடுவர் ஆர். ரக்ஷிதா நிகழ்வை ஆய்வு செய்து சான்றிதழ்களை வழங்கினார்.


நிகழ்வை ஐ.எம்.ஏ கோவை தலைவர் டாக்டர் கோஷல் ராம், செயலாளர் டாக்டர் டி. பரமேஸ்வரன், எஸ்.என்.எஸ்., செயலர் பாலசுப்ரமணியன், டாக்டர் நளின், டாக்டர் அனுஷா கோஷல் ராம், டாக்டர் எஸ். சதீஷ் குமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.


ஐ.எம்.ஏ., தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் டாக்டர் ஏ.கே. ரவிகுமார், மேற்கு மண்டல துணைத் தலைவர் டாக்டர் சி.பி. சண்முகசுந்தரம், முன்னாள் மாநிலச் செயலாளர் டாக்டர் எஸ். கார்த்திக் பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img