Homeபிற செய்திகள்காமாட்சிபுரி ஆதீனத்தில் ‘உதிரம்’ செயலி வெளியீடு

காமாட்சிபுரி ஆதீனத்தில் ‘உதிரம்’ செயலி வெளியீடு

கோவை இருகூர் காமாட்சிபுரி ஆதீனத்தில் ‘உதிரம்’ செயலி வெளியீட்டு விழா நடந்தது. காமாட்சிபுரி ஆதீனம் 2ம் குரு மகா சன்னிதானம் சாக்த ஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
உதிரம் நிர்வாக இயக்குநர் சிவகுமார், அங்குராஜ் ஆகியோர் தலைமையில் நடந்த விழாவில், மருத்துவ மனைகளில் அவசர நிலையில் ஏற்படும் ரத்த தேவையை விரைவாக பூர்த்தி செய்யும் நோக்கில், தானியங்கி ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் இந்த செயலி உருவாக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டது. சிறப்பு அழைப்பாளர்களாக சிம்ட்டா குரூப் நிர்வாக தலைவர் சம்பத்குமார், வள்ளியம்மாள் அறக்கட்டளை நிறுவனர் ஜி.எம். வள்ளியம்மாள், கருமத்தம்பட்டி ரோட்டரி கிளப் துளிர் ஆர். மோகன்ராஜ், கேர் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் பிரியதர்ஷினி விமல் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img