fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டி ஆலோசனை கூட்டம்

திருப்பூரில் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டி ஆலோசனை கூட்டம்

2026-27 கல்வியாண்டில் திருப்பூர் மாவட்ட பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பான ஆலோச னைக் கூட்டம், குமார்நகர் பகுதியில் உள்ள பிஷப் உபகாரசாமி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டக் கல்வி அலுவலர் காளிமுத்து தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் பீட்டர் மரியதாஸ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பேசிய மாவட்டக் கல்வி அலுவலர் காளிமுத்து, இந்த கல்வியாண்டில் குறுமைய அளவி லான விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பள்ளிகளின் பட்டியலை அறிவித்தார். அதன்படி, அவிநாசி குறுமையத்திற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி (அவிநாசி), தாராபுரம் குறுமையத்திற்கு அரசு மேல்நிலைப் பள்ளி (தளவாய்பட்டினம்), காங்கேயம் குறுமையத்திற்கு அரசு மேல்நிலைப் பள்ளி (காங்கேயம்), பல்லடம் குறுமையத்திற்கு மெரிட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (கொடுவாய்), திருப்பூர் தெற்கு குறுமையத்திற்கு எம்.என். முருகப்பசெட்டியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி (பாளையக்காடு), திருப்பூர் வடக்கு குறுமையத்திற்கு விகாஸ் வித்யாலயா ஜூனியர்ஸ் பள்ளி (திருப்பூர்), உடுமலைப்பேட்டை குறுமையத்திற்கு அரசு உயர்நிலைப் பள்ளி (சோழமாதேவி) ஆகியவை பொறுப்பேற்று போட்டிகளை நடத்த உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் பீட்டர் மரியதாஸ் வாழ்த்துரை வழங்கினார். வருவாய் மாவட்ட விளையாட்டுப் போட்டிகளின் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், பாலசுப்பிரமணியம் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். உடற்கல்வி ஆசிரியர் ஆனந்தன் நன்றியுரை கூறினார்.

இக்கூட்டத்தில் திருப்பூர் வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட உடற்கல்வி இயக்குநர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img