fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு மாவட்டத்தில் ரூ.12.41 கோடி நலத்திட்ட உதவிகள், உபகரணங்கள், நிதியுதவி வழங்கல்

ஈரோடு மாவட்டத்தில் ரூ.12.41 கோடி நலத்திட்ட உதவிகள், உபகரணங்கள், நிதியுதவி வழங்கல்

ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.12.41 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள், உதவி உபகரணங்கள் மற்றும் நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வழியில் மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் சுயமரியாதையுடனும், சம உரிமையுடனும் வாழ பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்துக் காத்திருப்போர் பட்டியலிலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்க ரூ.62.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென 01.09.2021 அன்று சட்டமன்றப் பேரவையில் முதல்வர் அறிவித்தார்.

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2021-&2022-ம் நிதி ஆண்டில் 1972 மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 4856 தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைகளும், கடுமையாக பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 658 மாதம் ரூ.2000 வீதம் ரூ.12.55 கோடி பராமரிப்பு உதவித்தொகைகளும், 40%க்கு மேல் மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 4614 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2000/- வீதம் ரூ.8.93 கோடி பராமரிப்பு உதவித்தொகைகளும், 40% தசைச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட் டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 144 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2000/- வீதம் ரூ.28.87 இலட்சம் மதிப்பிலான பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

40%க்கு மேல் தொழுநோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந் தோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 317 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2000/- வீதம் ரூ.5.77 இலட்சம் பராமரிப்பு உதவித்தொகைகளும், 40%க்கு மேல் முதுகு தண்டுவடம், நாள் பட்ட நரம்பியல் நோய் மற்றும் பர்கின்சன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 36 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2000/- வீதம் ரூ.7,02,000/- மதிப்பிலான பராமரிப்பு உதவித்தொகைகளும், உயர் ஆதரவு தேவைப்படுவோர் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 85 நபர்களுக்கு ரூ.7,20,000/- நிதியுதவியும், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 217 நபர்களுக்கு ரூ.7,50,000/- கல்வி உதவித்தொகையும், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 8 நபர்களுக்கு ரூ.40,000/-மும், வழங்கப்பட்டுள்ளன.

20 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,89,994/- வங்கி கடன் மானியமும், ஆவின் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைக்க 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 இலட்சம் மானியமும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75,000 நிதியுதவியும், தேசிய ஊனமுற்றோர் நிதி மற்றும் வளர்ச்சி கழகத்தின் மூலம் வங்கி கடனுதவி வழங்கும் திட்டத்தின் கீழ்1 நபருக்கு ரூ.2684 நிதியுதவியும், மாற்றுத்திறனாளியை நல்ல நிலையில் உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளும் திட்டத்தின் கீழ் 16 நபர்களுக்கு ரூ.5,00,000/- நிதியுதவியும், தலா 8 கிராம் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,42,000/- மதிப்பிலான தையல் இயந்திரங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் 26 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.19,89,000/- மதிப்பீட்டிலான ஸ்கூட்டர்களும், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, பிரத்யேகமாக வடிவ மைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப் பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தின் கீழ் 16 நபர்களுக்கு ரூ.14,12,800/- மதிப்பிலான ஸ்கூட்டர்களும், பார்வையற்ற மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலியுடன் கூடிய கைபேசி வழங்கும் திட்டத்தின் கீழ் 210 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.24 இலட்சம் மதிப்பிலான கைபேசிகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி வழங்கும் திட்டத்தின் கீழ் 150 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4,17000/- மதிப்பீட்டிலான காதொலி கருவிகளும், 0 முதல் 6 வயது வரையுள்ள செவித்திறன் பாதிக்கப்பட்ட 17 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.3,70,000/- செல வில் ஆரம்ப நிலை பயிற்சிகளும், தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் ஆரம்ப நிலைப்பயிற்சி மையம் ஆட்டிசம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி இல்லத்திற்கு 27 நபர்களுக்கு ரூ.30,06,000/- மதிப்பிலான உணவூட்டு செலவின மும், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளி களுக்கு உணவூட்டு செலவினம் மற்றும் ஊதிய மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 85 நபர்களுக்கு ரூ.32,10,600/- தொகையில் உணவூட்டு மானியம் மற்றும் ஊதிய மானியமும் வழங்கப்பட்டுள்ளது.

தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்படும் தொழில் பயிற்சியுடன் கூடிய ஆண்கள் 1 இல்லத்திற்கு ஒரு நபர் வீதம் 40 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11,06,800/- உணவூட்டு செலவினமும், ஊதிய மானியமும், மனநலம் பாதிக்கப் பட்டோருக்கான மறுவாழ்வு இல்லங்கள் 1 உணவூட்டு செல வினம் மற்றும் ஊதிய மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12,14,800/- செலவில் ஊதிய மானியமும், மீட்புத்திட்டத்தின் கீழ் 20 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.30,000/-மதிப் பிலான செலவினமும் என மொத்தம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12.41 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள், உதவி உபகரணங்கள் மற்றும் நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

‘தையல் இயந்திரத்தால்
வருகிறது வருமானம்’
ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த நந்தினி, க/பெ.அழகுவேல் (வயது 27) தெரிவித்ததாவது: எனக்கு மகளும் (வயது 7), மகனும் (வயது 5) உள்ளனர். இருவரும் சிறப்பு குழந்தைகள். எனது கணவர் எலக்டிரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இரண்டு குழந்தைகளையும் வைத்து கொண்டு, மருத்துவ செலவு செய்யவே வருமானம் போதவில்லை.

மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் இலவச தையல் இயந்திரம் வேண்டி விண்ணப்பம் அளித்திருந்தேன். கடந்த மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் எனக்கு ரூ.8,300/- மதிப்பிலான இலவச தையல் இயந்திரம் வழங்கினார். இதன் மூலம் எனக்கு வாரத்திற்கு ரூ.500/- வரை வருமானம் கிடைக்கிறது.

இதனை கொண்டு, குடும்பத்தினை சமாளித்து வருகிறோம். என்னை போன்ற சிறப்பு குழந்தைகள் உடைய பெற்றோர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் முதல்வருக்கு குடும்பத்தின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
விலையில்லா ஸ்கூட்டர்

ஆனந்தி நெகிழ்ச்சி
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டம், நல்லகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த திருநங்கை ஆனந்தி (வயது 46) தெரிவித்ததாவது: நான் தனியாக வசித்து வருகிறேன். 5-ம் வயதில் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டு, இரு கால்களும் ஊனமாக உள்ளது.

மோட்டார் வைத்த தையல் இயந்திரத்தின் மூலம் துணி தைக்க பழகி அதன் மூலம் வருவாய் ஈட்டி வாழ்ந்து வருகிறேன். உடன் பிறந்தவர்கள் எவரும் இல்லாததால், வெளியிடங்களுக்கு அழைத்து போக ஆள் இல்லாமல் தவித்து வந்தேன்.

மாற்றுத்திறனாளியாக இருந்ததால் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் பெட்ரோல் ஸ்கூட்டர் கேட்டு விண்ணப்பம் அளித்திருந்தேன். கடந்த மாதம் வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சரிடம் இருந்து ரூ.73,500/- மதிப்பிலான விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டரை பெற்றுக் கொண்டேன். முதல்வருக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி கடனோடு இருப்பேன் என்றார்.

‘10 ஆண்டுக்குப்பின் கிடைத்தது’
ஈரோடு மாவட்டம், நம்பியூர் வட்டம், வெட்டையன்பாளையம் காலனியைச் சேர்ந்த ரமேஷ்குமார் (வயது 32) தெரிவித்ததாவது: எனக்கு அண்ணன், அக்கா உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

நான் பெற்றோரிடம் இருந்து வருகிறேன். எனக்கு 21 வயதாகும்போது, பனைமரத்தில் ஏறும்போது, கீழே விழுந்து முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு, நடக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டு கொண்டிருந்தேன்.

மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகையினை பெற்று வருகிறேன். எங்கேயாவது வெளியே செல்ல வேண்டும் என்றால் பெற்றோர் உதவியுடன் தான் செல்ல வேண்டியிருந்தது.

மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் 10 வருடங்களாக தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பெட்ரோல் ஸ்கூட்டர் கேட்டு விண்ணப்பித்து வந்தேன். அந்தியூர் சட்டமன்ற உறுப்பினரின் முயற்சியால் தற்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ரூ.84,000/- மதிப்பிலான விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கினார்.

என்னைபோன்ற மாற்றுத்திறனாளி களையும் வாழ்க்கையை மலரச் செய்த முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தொகுப்பு:
க.செந்தில்குமார்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
ஈரோடு மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img