லோக் ஜனசக்தி கட்சி தேசிய பொது செயலாளர் ஜி. வி.மணிமாறன் மாநில தலைவர் சத்தியசீலன் துணை தலைவர் பாலாஜி தமிழ்நாடு, மாநில பொதுச்செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் இன்று (வியாழக்கிழமை) நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது தேசிய பொது செயலாளர் மணிமாறன் கூறியதாவது:-
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் அதியமான்(40)சிவராஜ் (35) சம்பத் (40) கந்தன்(40) முருகன்(35) ஆறுமுகம் (50) பேர் உள்பட 23 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கை இலங்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்கிறது. இந்த மீனவர்கள் தண்டிக்கப்பட்டால் அவர்களது குடும்பம் கடுமையாக பாதிக்கப்படும்.
எனவே வெளியுறவுத்துறை அமைச்சகம் இதில் உடனடியாக தலையிட்டு 23 மீனவர்களையும் 2 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்கண்டவாறு அவர் கூறினார்.



