கோவையில் கொரோ னா தொற்று காரணமாக ஹோட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் இரவு நேர புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு புத்தாண்டு கொண் டாட்டங்களில் அதிக அளவில் கூடுவதன் மூலம் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் முலம் ஒமைக்ரான் நோய்த் தொற்று தமிழகத்தில் வேக மாக பரவி வருகிறது. எனவே கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமு றைகளை தீவிரமாகப் பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.
எனவே, கோவை மாவட்டத்தில் உணவ கங்கள், தங்கும் விடுதிகள், சாலைகள் மற்றும் இதர இடங்களில் டிசம்பர் 31ம் தேதி இரவு புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
தடையை மீறி புத்தாண்டு கொண்டாட் டத்துக்காக கூட்டம் கூடுதல் போன்ற விதி மீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.



