fbpx
Homeபிற செய்திகள்இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் கட்டுமானப் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் கட்டுமானப் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் ரூ.40.07 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம் நிறுத்தும் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை தரமாகவும், துரிதமாகவும் செய்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.

உடன் மத்திய மண்டல குழுத்தலைவர் மீனா லோகு, 83வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுமா, உதவி ஆணையாளர் சங்கர், உதவி நகரமைப்பு அலுவலர் பாபு, உதவி பொறியாளர் கமலக்கண்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img