ராமநாதபுரம் மாவட் டம் கீழக்கரை தாலு காவுக்கு உட்பட்ட தில்லையேந்தல் பஞ்சாயத்தில் அமைந்திருக்கும் 500 பிளாட் பகுதியில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் சார்பில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கத்தின் ஆண்டு விழா, ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு விருந்தி னர்களாக கீழக்கரை நகர் மன்றத்தலைவர் செஹானஸ் ஆபிதா, நகர் மன்ற துணைத்தலைவர் வழக்கறிஞர் ஹமீதுசுல்தான், கலந்துகொண்டு ஏழை எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்நிகழ்வில் தில்லையேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.டி கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் மர்சூஹா பானு மற்றும் கீழக்கரை நகர்மன்ற உறுப்பி னர்கள் முகம்மது ஹாஜாசுஐபு, பயாஸ்தீன், காயத்ரி, பைரோஸ் பாத்திமா, உம்முல்சல்மா பீவி, முன்னாள் கவுன்சிலர் சாகுல் ஹமீது, எபன், சுபியான், நயிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



