கன்னியாகுமரி மாவட்டத்தில், டவ்தே புயல், யாஸ் புயல் மற்றும் வடகிழக்கு பருவ மழை யினால் சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணமாக 1,083 விவசாயிகளுக்கு ரூ.50,59,174 அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளன.
‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின் செல் பவர்’
நாட்டின் ஒட்டுமொத்த சமூக மற்றும் பொரு ளாதார வளர்ச்சியில் வேளாண்மை முக்கியப் பங்கு வகிக்கிறது.
மக்களின் வாழ்வாதாரமாக திகழ்ந்து உணவு அளிப்பதோடு, வேலை வாய்ப்பளித்தல், தொழில் துறை முன் னேற்றம், பன்னாட்டு வாணிபம், வறுமை ஒழிப்பு எனப் பல்வேறு இனங் களிலும் வேளா ண்மை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந் துள்ளது.
தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் 70 சதவீத மக்களுக்கு வேளா ண்மைத் தொழிலே வாழ் வாதாரமாக இருந்து வருகிறது. வேளாண் மையில் ஏற்படக்கூடிய எந்த ஒரு சிறு மாற்ற மும் தமிழ்நாட்டின் பொரு ளாதார வளர்ச்சியில் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, வேளாண் தொழிலுக்கு அதிக முக்கியத்துவம் அளி த்து வருகிறது.
சாகுபடி பரப்பு அதி கரிப்பு
தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை வாயிலாக, தமிழ்நாட்டில் கடந்த 1979-ம் ஆண்டில் 6.6 இலட்சம் எக்டராக இருந்த தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி பரப்பு தற்போது, 15.28 இலட்சம் எக்டராக அதிகரித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
தோட் டக்கலை பயிர்கள் சாகுபடி, விவசாயிகளின் வருமா னத்தை அதிக ரிப்பதாலும், தரப்படுத்துதல், சந்தைப் படுத்துதல் மூலம் வேலை வாய்ப்புகளை வழங்கு வதாலும், மக்களின் ஊட் டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்வதாலும், வேளாண்மையில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
காய்கறிகள் மற்றும் பழ வகைகளின் தேவை நாள்தோறும் அதிகரித்து வருவதால், இவற்றின் உற்பத் தியினைப் பெருக்கி டவும், புதிய தொழில் நுட்பங்கள் விவசாயிகளுக்கு சென்றடையவும், தோட்டக்கலைத்துறை பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
புதிய பயிர்கள்
குறிப்பாக குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி, வெண்ணெய்ப்பழம், துரியன், ஸ்டிராபெர்ரி, கொடுக்காப்புளி, டிராகன் போன்ற புதிய பயிர்கள் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டன.
பாதுகாக்கப்பட்ட சூழலில் பயிர் சாகுபடி, நுண்ணீர்ப் பாசனம், நீர்வழி உர மேலாண்மை, ஒருங் கிணைந்த ஊட்டச்சத்து, பூச்சி, நோய் மேலாண்மை, அறுவடை பின்சார் தொழில் நுட்பங்கள் போன்ற உயர் தொழில் நுட்பங்களும், வீட்டுக் காய்கறித் தோட்டம், மாடித் தோட்டம், பந்தல் காய்கறிகள் சாகுபடி, காளான் வளர்ப்பு, ஊட்டச்சத்துத் தோட்டம் போன் றவற்றிற்கும் முக்கியத்துவம் அளித்து திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரு கின்றன.
கன்னியாகுமரியின் சிறப்பு
கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித் ததாவது:
கன்னியாகுமரி மாவட் டமானது வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழைகளை தன்னகத்தே கொண்ட சிறப்புடையது. நமது மாவட்டத்தில் கடும் புயல், கனமழை போன்ற இயற்கை பேரிடர்களால் எதிர்மறை காரணிகளையும் பல்வேறு காலக்கட்டத்தில் ஏற்படுத்தி வருகிறது.
கடந்த பல வருடங் களாக கனமழை மற்றும் புயலின் காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் விவசாய நிலங்கள், பயிர்கள், மரங்கள் மிகவும் பாதிக்கப்பட்டதன் அடிப்படையில், வெள்ளச் சேதம் குறித்த திட்ட மதிப்பீடு மற்றம் கருத்துருக்கள் அனுப் பப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவார ணத் தொகை வழங்குவது நிலுவையில் இருந்தது.
இச்சூழ்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையினாலும், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினாலும் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு விளைநிலங்கள் மிகவும் பாதிக்கப்பட்டன.
அப்பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 15.11.2021 அன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டதோடு பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி பயிர் சேதம் குறித்த திட்ட அறிக்கை தயாரிக்குமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதன் அடிப்படையில், இயற்கை பேரிடர்களின் போது தோட்டக்கலைத் துறை, வருவாய்த் துறை அலுவலர்களின் பயிர் சேத விபரங்கள் கணக்கெடுப்பின் துரித நடவடிக்கைகளாலும், தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் துரித செயல்பாடுகளால் தாமதங்களின்றி நிலு வையிலுள்ள தொகையோடு தற்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவா ரணத் தொகையானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப் பெற்றுள்ளன.
நிவாரணத் தொகை உயர்வு
முன்பு ஓராண்டு பயிருக்கு எக்டருக்கு ரூ.13,500 ஆக இருந்த நிவார ணத் தொகையானது தற்போது எக்டருக்கு ரூ. 20,000 ஆகவும், பல்லாண்டு பயிருக்கு எக்ட ருக்கு ரூ.18,000 ஆக இருந்த நிவாரணத் தொகையானது தற்போது எக்டருக்கு ரூ. 25,000 ஆகவும் உயர்த்தப்பட்டு நிவாரணத் தொகை விரைவாக விவசாயிகளை சென்றடைந்தது.
இத்தகு துரித நடவடிக்கையின் விளைவாக பயிர் சேதமைடைந்த விவசாய பெருமக்கள் தங்கள் வயலில் மீண்டும் வாழை, மரவள்ளி மற்றும் இதர காய்கறிப் பயிர்கள், ரப்பர் மற்றும் இதர மலைத் தோட்டப்பயிர்கள், வாசனை திரவியப் பயிர்கள், மலர் பயிர்கள் சாகுபடி செய்ய பேருதவி புரிந்துள்ளது.
டவ்தே புயலில் பாதிக்கப்பட்ட 82 விவசாயிகளுக்கு ரூ.3,81,600 நிவாரணத் தொகையும், யாஸ் புயலில் பாதிக்கப்பட்ட 596 விவசாயிகளுக்கு ரூ.28,09,574 நிவாரணத் தொகையும், வடகிழக்கு பருவ மழை சேதத்தினால் பாதிக்கப்பட்ட 405 விவசாயிகளுக்கு ரூ.18,68,000 நிவாரணத் தொகையும் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத் தப்பட்டுள்ளது.
தமிழக அரசின் அறிவு ரையின்படி வருவாய் துறை அமைச்சர் பயிர் சாகுபடி செய்த பாதிக்கப்பட்ட வாய்மொழி குத்தகை தாரர்களும் பயன்பெற ஏதுவாக நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டு வாய்மொழி குத்தகை விவசாயிகளும் பயனடைந்துள்ளனர்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்தார்.
‘கிடைத்தது நிவாரணம்
மீண்டும் வயலில் இறங்கினேன்’
கன்னியாகுமரி மாவட்டம், திருவட் டார் வட்டாரம் பொன் மனை கிரா மத்தை சேர்ந்த ராஜேந்திரன் கூறிய தாவது
கன்னியாகுமரி மாவட்டம் திருவட் டார் வட் டாரம் பொன்மனை கிராமத் தில் குத்தகை நிலத்தில் 0.90 எக்டர் பரப்பளவில் வாழை மற்றும் மரவள்ளி பயிரிட்டு இருந்தேன். நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொடர்ந்து பெய்த கனமழையினால் நான் பயிரிட்ட வாழை மற்றும் மரவள்ளி பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி பாதிப்படைந்தன.
இது தொடர்பாக வட்டார தோட்டக்கலை அலுவலர் மற்றம் கிராம நிர்வாக அலுவலரை அணுகினேன். அவர்கள் உடனடியாக கூட்டாய்வு மேற்கொண்டு, தோட்டக்கலைத் துறை மூலம் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.
முதல்வரின் நடவடிக்கையால் ரூ.17,971/- கிடைத்தது. ஜனவரி மாதத்தில் நிவாரண தொகையை பயன்படுத்தி நான் மீண்டும் வாழை மற்றும் மரவள்ளி பயிரிட்டுள்ளேன்.
எனக்கு இந்த நிவாரணத் தொகை விரைந்து கிடைக்க நடவடிக்கை மேற்கொண்ட முதல்வருக்கு என்னுடைய சார்பாகவும், எனது குடும்பத்தின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசிற்கு நன்றி உள்ளவனாக இருப்பேன் என்றார்.
‘மூழ்கிய பயிரால் கவலை
துரித நடவடிக்கையால் மகிழ்வு’
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டாரம் மத்திக்கோடு கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் த/பெ.பொன்னையன் கூறியதாவது:
மத்திகோடு கிராமத்தில் வாய்மொழி குத்தகை நிலத்தில் 1.70 எக்டர் பரப்பளவில் வாழை பயிரிட்டு இருந்தேன். கடந்த வருட இறுதியில் தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக நான் நடவு செய்த வாழை மரங்கள் வெள்ளத்தில் மூழ்கி பாதிப்படைந்தன.
இது தொடர்பாக வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரை அணுகினேன்.
அவர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாய நிலத்தினை நேரில் வந்து பார்த்ததோடு, மாவட்ட தோட்டக்கலை துறையின் மூலம் சேத மதிப்பு குறித்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.
அதன் அடிப்படையிலும், முதல்வரின் உடனடி நடவடிக்கையாலும் கிடைத்தது ரூ.21,571/-. ஜனவரி மாதத்தில் நிவாரணத் தொகையை பயன்படுத்தி நான் மீண்டும் வாழை பயிரிட்டுள்ளேன்.
இந்த நிவாரணத் தொகை எனக்கு விரைந்து கிடைக்க நடவடிக்கை மேற்கொண்ட முதல்வருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘வெள்ளத்தில் மூழ்கியது பயிர்
கை கொடுத்தது அரசின் உதவி’
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டாரம் நல்லூர் கிராமத்தை சேர்ந்த பொன்னையன் த/பெ.நல்லதம்பி கூறியதாவது:
நல்லூர் கிராமத்தில் சொந்த நிலத்தில் 1.42 எக்டர் பரப்பளவில் மரவள்ளி பயிரிட்டு இருந்தேன். நவம்பர், டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் நான் பயிரிடட மரவள்ளி பயிர் வெள்ளத்தில் மூழ்கி முழுவதுமாக பாதிப்படைந்தது.
எனது வாழ்வாதாரம் குறித்து மிகவும் வருத்தப்பட்டு கொண்டிருந்த நிலையில் தமிழ்நாடு அரசு மழையால் பாதித்த விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து, வட்டார தோட்டக்கலை அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலரை அணுகினேன்.
அவர்கள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, தோட்டக்கலை துறை மூலம் அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.
முதல்வரின் நடவடிக்கையால் ரூ.16,371/- ஜனவரி மாதத்தில் நிவாரண தொகை கிடைத்ததை பயன்படுத்தி நான் மீண்டும் வாழை பயிரிட்டுள்ளேன்.
நிவாரணத் தொகை விரைந்து கிடைக்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சருக்கும், கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்திற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தொகுப்பு
பா.ஜாண் ஜெகத் பிரைட்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
ஜா.லெனின்பிரபு,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)
கன்னியாகுமரி மாவட்டம்.



