fbpx
Homeபிற செய்திகள்ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரைக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு

ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரைக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு

சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த அண்ணாதுரை, குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார்.

இவர் தனது ஆட்டோவில் பயணிப்பவர்களுக்கு வை-பை இன்டர்நெட் வசதி, செய்திதாள்கள், வார இதழ்கள், டேப்லட், சிறிய குளிர்சாதனப்பெட்டி, சாக்லேட், ஸ்நாக்ஸ் என பல வசதிகளை இலவசமாக வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார்.

மேலும் வாடிக்கையாளர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே பெறுகிறார். இதை அறிந்து அவரை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு தமது அலுவலகத்துக்கு வரவழைத்து பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img