ஸ்மார்ட்போன் விற்பனையில் உலகளாவிய பிராண்டாக திகழும் விவோ நிறுவனம் தனது இளமை மிக்க ஒய் மாடலில் நீட்டிக்கப்பட்ட ரேம் மற்றும் குவால்காம் ஸ்நாப் டிராகன் 662 புராசசருடன் ஒய்20டி ஸ்மார்ட் போனைஅறிமுகம் செய்துள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கார்டுடன் வெளிவந்துள்ள இதன் விலை 15,490 ரூபாய். 4ஜிபி ரேமில் வெளிவந்த இந்த ஸ்மார்ட் போன் தற்போது நீட்டிக்கப்பட்ட 2ஜிபி ரேம் மற்றும் 1ஜிபி ஐடியல் ரேமுடன் வெளிவந்துள்ளது.
7ஜிபிரேமிற்கான அதிவேகத்தை கொண்டிருப்பதோடு இதன் மூலம் ஒரு செயலியில் இருந்து மற்றொரு செயலிக்கு வேகமாகவும் எளிமையாகவும் மாறமுடியும்.
அப்சிடியன் பிளாக் மற்றும் ப்யூரிஸ்ட்ப்ளூ ஆகிய 2 அழகான வண்ணங்களில் வெளி வந்துள்ள இது இந்தியா முழுவதும் உள்ள ஆப்லைன் மற்றும் விவோ இந்தியா இ-&ஸ்டோர், அமேசான், பிளிப்கார்ட், பேடிஎம், பஜாஜ் பின் சர்வ் இஎம்ஐ ஸ்டோர் ஆகியவற்றில் கடந்த 11-ம் தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த புதிய மாடல் குறித்து விவோ இந்தியாவின் பிராண்ட் ஆலோசனை இயக்குனர் நிபுன்மரியா கூறுகையில், விவோவின் இளமை மிக்க ஒய் மாடல் ஸ்மார்ட் போனான இது, அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, புத்துணர்ச்சியூட்டும் வடிவமைப்பு, துல்லியமான டிஸ்பிளே மற்றும் நீண்ட நேர பயன்பாட்டிற்கு ஏற்ற பேட்டரி ஆகியவை நுகர்வோருக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகிறது.
இந்த ஒய்20டி மூலம், வாடிக்கையாளருடனான அணுகுமுறையில் ஒருபடி மேலே சென்று, வாங்கக் கூடிய குறைந்த விலையில் வழங்குகிறோம் என்றார்.
6.51 இன்ச் புல் டிஸ்பிளே உடன் விவோ ஒய்20டி வெளி வந்திருக்கிறது.
இது எச்டி+ (1600×720) ரிசொ லுஷனை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் 18 வாட்ஸ் பிளாஷ் சார்ஜ் தொழில் நுட்பத்துடன் 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.
இதில் உள்ள மின் ஆற்றல் சேமிப்பு செயற்கை நுண் ணறிவு தொழில் நுட்பம் 20 மணி நேர ஆன்லைன் எச்டி மூவிஸ் ஸ்ட்ரீமிங் மற்றும் 8 மணி நேர கேம் விளையாடும் வசதியை வழங்குகிறது.
சிறந்த செல்பி அனுபவத்தை வழங்க 8 எம்பி முன் புற கேமராவை அது கொண்டுள்ளது.



