கோவையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு, தமிழக அரசின் அனுமதியின் பேரில், குளிர்சாதன பேருந்துகள் நேற்று (அக்.1) முதல் இயங்கத் துவங்கின.
கொரோனா பரவல் காரணமாக, குளிர்சாதன வசதிகளுடனான பேருந்துகள் இயக்க தடை விதிக்கப்பட்டு, நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் நேற்று முதல் தமிழகம் முழுவதும் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில் மொத்தம் 13 குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
முதல்கட்டமாக சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் 7 பேருந்துகள் இயக்கப்பட்டன.
140 நாட்களுக்குப் பின்பேருந்துகள் இயக்கப்படுவதால், பேருந்து முழுவதும் கிருமிநாசினிகள் அடிக்கப்பட்டன. இதையடுத்து வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்பட்டன.
பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
50 சதவீதபயணிகளுடன் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பின் குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்பட்டதால், பொது மக்கள் ஆர்வத் துடன் பயணம் செய்து வருகின்றனர்.



