fbpx
Homeபிற செய்திகள்அனைத்து மாநில கைவினைப்பொருட்கள் கண்காட்சி விற்பனை தொடக்கவிழா

அனைத்து மாநில கைவினைப்பொருட்கள் கண்காட்சி விற்பனை தொடக்கவிழா

கோவை பீளமேடு சுகுணா திருமண மண்டபத்தில் அனைத்து மாநில கைவினைப்பொருட்கள் கண்காட்சி விற்பனை தொடக்கவிழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற்றது.

விழாவில் கோவை மாநகராட்சி முன்னாள் கவுன் சிலர் சோபனா செல்லம், கோ கிளாம் நிர்வாக இயக்குனர் ஹீனா ராகுல் இயக்குனர்கள் ராகுல், அன்னாவ், ஆர்.வி.எஸ்.அமுதசுரபி, ஸ்ரீவித்யா ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி தொடங்கிவைத்தனர்.

இந்த கண்காட்சியில் ராஜஸ் தான், ஜெய்ப்பூர், பீகார், ஒரிசா, காஷ்மீர், கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 80 அரங்குகள் கண்காட்சியில் இடம் பெற்று உள்ளன.

இந்த கண்காட்சி விற்பனை வருகிற 10-ந்தேதி முடிய 3 நாட்கள் நடக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img