கோவை அதிமுக மாநகர் மாவட்ட செயலா ளரும், கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் ஆகியோர் தலைமையில் கோவை அவினாசி சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலையிட்டு மரியாதை செய்யப்பட்டது.
மேலும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கும் மாலை அணிவித்தனர். அதனை தொடர்ந்து கோவை அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில், அதிமுக கொடியேற்றி வைத்து அலங்கரித்து வைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.
இதில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள், உட்பட பொதுமக்களும் ஏராள மானோர் கலந்து கொண் டனர்.



