சர்தார் வல்லபாய் படேல் நினைவு தேசிய ஒருமைப்பாட்டு தின ஓட்டம், கோவை அருகே ஒத்தக்கால் மண்டபத்தில் அமைந்துள்ள, ஹிந்துஸ் தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், என். சி .சி. அமைப்பின் சார்பில் சர்தார் வல்லபாய் படேல் நினைவு தேசிய ஒருமைப்பாட்டு தின ஓட்டம் நடைபெற்றது.
கல்லூரியின் டீன் முனைவர் மகுடேஸ்வரன் தேசிய ஒருமைப்பாட்டு தின உறுதிமொழியை வாசிக்க மாணவர்கள் அனைவரும் அதை எடுத்துக் கொண்டனர். கல்லூரி முதல்வர் முனைவர் ஜெயா, ஒருமைப்பாட்டு தின ஓட்டத்தை கொடிஅசைத்து துவைக்கி வைத்தார்.
மாணவர்கள் அனைவரும் கல்லூரி வளாகத்திற்குள் சுமார் 3 கி .மீ. தூரம் இந்த நினைவு ஓட்டத்தை ஓடினர். அதன் பின்னர் சர்தார் வல்லபாய் படேல் வாழ்கை வரலாறு குறித்த டிஜிட்டல் கண்காட்சி மற்றும் குறும்படம் ஒளிபரப்பப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் மூலம் மாணவர்கள் அனைவரும் இந்தியாவின் இரும்பு மனி தர் சர்தார் வல்லபாய் படேலின் சுதந்திர பங்களிப்பு பற்றியும் தியாக உணர்வையும் தெரிந்து கொண்டனர்.
இதில் என் சி சி மாணவர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொணடனர்.
ஏற்பாடுகளை கல்லூரி என். சி. சி. அலுவலர்கள் லெப்டினன்ட் ரவிக்குமார் , மனோஜ் பிளையிங் ஆபிசர் ஜெய்னுலாப்தீன், பேராசிரியர் சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.