ரோட்டரி கிளப் ஆஃப் காட்டன் சிட்டி, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையுடன் இணைந்து, தாய்ப்பால் வங்கியை கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதி தொடங்கியது. கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, காரமடை, புதுச்சேரி ஆகிய இடங் களில் இருந்து தாய்ப்பால் தானம் பெறப்பட்டு, இந்த தாய் ப்பால் வங்கியில் பாது காக்கப்பட்டு வருகிறது.
இதன்படி கடந்த ஆண்டு 4,00,078 மி.லி. தானம் பெறப்பட்டு, 2,97,769 மி.லி. தாய்ப்பால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 250 குழந்தைகளுக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. குறை மாதத்தில் பிறந்த குழந்தைகள் மற்றும் எடை குறைவாகப் பிறந்த குழந்தைகளுக்கு தாய் மார்கள் நேரடியாகப் பாலூட்ட முடியாது என்ப தால், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதன்மூலம் பெறப்படும் தாய்ப்பாலானது குழந்தைகளுக்குக் கொடுக்கப் படுவதால்,குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைவதோடு, அவர் களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்ததும் கண்டறியப்பட்டது.
தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டு ஓராண்டு ஆனதையொட்டி, முதலாம் ஆண்டு விழா, ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையில் நேற்று (ஆக.23) கொண்டாடப்பட்டது.
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர், ரோட்டரி மாவட்ட ஆளுநர் எஸ்.ராஜ்மோகன் நாயர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். மாவட்ட பயிற்றுநர் ஆர்.மாதவ் சந்திரன் பேசினார்.தாய்ப்பால் தானமாக வழங்கிய தாய்மார்கள் விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அலுவலர் சி.வி. ராம்குமார், ஸ்ரீ ராம கிருஷ்ணா மருத்துவமனை டீன் மற்றும் மருத்துவ இயக்குநர் டாக்டர் பி.சுகுமாரன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆர்.மயில்சாமி, சுமித் குமார் பிரசாத், ராகேஷ் குமார் ரங்கா, நிரவ் சேத், டாக்டர் நீதிகா பிரபு, கிருஷ்ணா டி.சமந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



